Namakkal Gopakanthi starring Viramagan Cinematic film release to Deepavali: The CD is released the same day.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் கதாநாயகனாக நடித்துள்ள வைரமகன் சினிமாப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ரிலீசாகும் நாளில் டிவிடியும் வெளியிடப்படுகிறது.

நாமக்கல்லைச் சேர்ந்த ஆர்எஸ்ஜி பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளரும், சினிமா நடிகருமான கோபிகாந்தி இது குறித்து தெரிவித்ததாவது;

இன்றைய காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் சினிமா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி ரசிகர்களை திரையரங்கிற்குள் கொண்டு வர வைப்பது மிக கடினமான விஷயமாகும்.

இன்றைய சூழலில் இணையதளங்கள் மூலமாக படங்களை பார்க்கும் மோகம் அதிகரித்துள்ளதால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறைந்துள்ளது.

அதை மீறி நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அதிக பொருட்செலவில் தயாராகும் படங்களை திரையரங்கிற்கு வந்து ரசிகர்கள் பார்க்கின்றனர்.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் படத் தலைப்பை பதிவு செய்ய மிகவும் சிரமப்பட பட வேண்டியுள்ளது.

பின்னர் ஒவ்வொரு சான்றுகள் பெறுவதற்கும், படம் வெளியிடுவதற்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அலையவேண்டியுள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படத்தை தயாரித்து தனிக்கை சான்று பெறுவதற்கு 6 மாத காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

மேலும் இதற்கு பிறகு திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல சிறிய படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இப்படி பல்வேறு சோதனைகளை கடந்து வைரமகன் சினிமாடப்படம் முழுமயடைந்து, வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை டைரக்டர் முருகவேல் இயக்கியுள்ளார். எஸ்.எஸ். சூர்யா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சகன்யாஸ்ரீ நடித்துள்ளார்.

நெல்லை சிவா, போண்டா மணி, விஜய் கணேஷ், அப்பு உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடித்துள்ளனர், படத்தில் 4 பாடல்கள் அருமையாக இடம் பெற்றுள்ளன.

பல்வேறுசிரமத்தை எதிர்கொண்டு வைரமகன் படம் என்னுடைய மக்கள் சேவை இயக்கம் மூலமாக வெளியிடப்படும். மேலும், படம் வெளியாகும் அன்றே டிவிடியும் வெளியிடப்பட உள்ளது. அதற்காக தற்போது முன்பதிவு செய்யப்படுகிறது.

இத்துடன் அன்றே முழு திரைப்படத்தையும் இன்டர்நெட்டில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்களை நம்பி இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளேன். ரசிகர்கள் இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!