Namakkal collector Petition to the farmer’s wife recover Bangalore Nittiyanantha board

பெங்களூர் நித்தியானந்தா பீடத்திற்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் விவசாயி மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நான் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறேன்.விவசாயம் செய்து வருகிறேன் கடந்த 26 3 2018 அன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆகிய உங்களிடம் எனது மனைவி மற்றும் மகன் மகன் பெங்களூரில் உள்ள நித்யானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை என தெரிவித்து இருந்தேன் இதையடுத்து போலீஸ் துறையினர் என் மகனை மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர் ஆனால் என் மனைவி அத்தாய் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியவில்லை செல்போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. என் மனைவி மீது வங்கி கடனாக ரூ 5 லட்சமும் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சமும் நகை அடமான கடன் ரூ.30 ஆயிரமும் மற்றும் வெளி நபர் கடன் உள்ளது வங்கி அதிகாரிகள் என்னிடம் நேரில் அழைத்து ஒப்பந்தம் போடவும் பணத்தை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

இந்தப் பணம் முழுவதையும் 21 நாள் தியான வகுப்புக்கு எனது மனைவி எடுத்துக்கொண்டு செலவு செய்து விட்டார். இதனால் கடந்த 8 மாதமாக நான் கடன் தொல்லையாலும் உணவு இன்றியும் மன உளைச்சலில் உள்ளேன். இனி தற்கொலை செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை எனவே மனைவியை நேரில் வரவழைத்து கடனை செலுத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!