Municipal school student who won the national level sports competition; MLA Appreciation

நாமக்கல் : தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவனை எம்எல்ஏ பாராட்டி பரிசு வழங்கினார்.

தேசிய அளவிலான சாய் வாங்டோ போட்டி சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளியை சேர்ந்த ஹரிவல்லபா என்ற மாணவர் தேசிய அளவில் மூன்றாமிடத்தை பெற்றார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ளார்.

தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவனை பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சான்றிதழ் மற்றும் ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கியுள்ளார். மேலும் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

இதனையடுத்து தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மரகதம் தலைமை வகித்தார்.

நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன், கட்டிடக்குழு தலைவர் பெரியசாமி, உழவன் தங்கவேல், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவன் ஹரிவல்லபாவை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

2017-18 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு காமராஜர் விருது மற்றும் ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகை பெற்ற மாணவன் சையத் அமீருல்லாஹை பாராட்டி பரிசுகள் வழங்கினார். இதில் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் சம்பத், மோகன், கமால் பாஷா, ரவி, நரசிம்மன், தில்லை சிவா, நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பொரி சண்முகம், என்சிஎம்எஸ் இயக்குநர் இக்பால், வார்டு செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் கோபிநாத், நகர துணைத்தலைவர் சன்பாலு, நகர பொருளாளர் ராஜா, சிறுபான்மையினர் நலபிரிவு மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராதிகா, பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் ராஜகுமாரி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!