Mugavai Walkthaon 2018 Awareness rally: Ramanathapuram students and volunteers participation

ராமநாதபுரத்தில் மக்கள் பங்களிப்புடன் ஏழ்மையில் உள்ள மக்களின் வாழ்க்கைதரத்தினை உயர்த்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகவை வாக்கத்தான் 2018 விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தினை அனைத்து வகையிலும் முன்னேறிய மாவட்டம் என்கிற நிலையை அடைய செய்ய வேண்டும் என்பதற்காக பாசன கண்மாய் சீரமைத்தல், துார்வாருதல், பண்னண குட்டைகள் அமைத்தல், வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகையை கட்டுப்படுத்துதல், ஏழை குடும்பங்களுக்கான கழிப்பறை கட்டுதல், சமுக காடுகள் அமைத்தல், மண்புழு உரம் தயாரிப்பு கக்ஷடம் அமைத்தல், சுரிய ஆற்றல் கருவிகள் அமைத்தல், கருவேலம் மரங்களை அகற்றி பயன் தரும் மரங்களை நடுதல், சிறுகுறு விவசாயத்திற்கு தானிய கிடங்கு அமைத்தல், நெற்களம் அமைத்தல் மற்றும் விதைப் பண்ணைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு சுமுதாய வளர்ச்சி பணிகளில் பொது மக்களின் பங்களிப்பினை ஊக்கப்படுத்தி ஈடுபடுத்துவதே இப்பேரணியின் நோக்கமாகும்.

பேரணி ராமநாதபுரம் அரண்மனை அருகே ராஜா மேல்நிலைப்பள்ளி முன்பு துவங்கி சாலை வீதி வழியாக ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ைமதானத்தில் நிறைவு அடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தானம் அறக்கட்டளை ஏற்பாடு செய்த இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவிகள், களஞ்சிய இயக்க பெண்கள், வயலக இயக்க விவசாயிகள், நெய்தல் இயக்க மீனவர்கள், தானம் அறக்கட்டளை பணியாளர்கள் பொது மக்கள் அரசு அதிகாரிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ராஜா மேல்நிலப்பள்ளி, லுாயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளி, கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி ஏரோநாட்டிக் மாணவர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் சிகரம் வட்டார களஞ்சியம் பிரசாத்குமார் வரவேற்றார். நிரபராதி மீனவர்கள் சங்க தலைவர் அருளானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் பாரதி நன்றி தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!