MLA Tamilselvan praised the winners of the Para Olympic Athletic Championships

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் 19 பதக்கங்களை வென்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி வீரர்களை எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் பாராட்டி நிதி உதவி வழங்கினார்.

மதுரை ரேஸ் கோர்ஸ் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 14-வது தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் அன்மையில் நடைபெற்றது. இதில் பெரம்பலுõர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

நீளம் தாண்டுல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீச்சல் ஆகிய போட்டிகளில் ரமேஷ், அம்பிகாபதி, கலைச்செல்வன், சூர்யா, தீபா, கிருபாகரன், கரிகாலன், முத்துக்குமார் ஆகிய 8 மாற்றுத்திறனாளிகள் முதல் 3 இடங்கள் பெற்று 9 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் ஆகிய 19 பதக்கங்களை வென்றனர்.

மேலும் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேசிய அளவிலான போட்டிகள் வரும் மார்ச் 9, 10ம்தேதிகளில் நடைபெறவுள்ளது.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாற்றுத்திறனாளிகள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வனை சாந்தாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளிகளை எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் பாராட்டி நிதி உதவி வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!