Milk theft infront of the police station: Agents complain to the top authorities to refuse action

பால் முகவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் பால் முகவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கொடுத்துள்ள மனு சுருக்கம்:

அடையாளம் தெரியாத நபர்களால் பால் திருடப்படும் “ரகசிய கண்காணிப்பு ஒளிப்பதிவு (சிசிடிவி)” கட்சிகளோடு சம்பந்தப்பட்ட எல்லையில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் உரிய ஆதாரங்களோடு சென்றால் கடைகளுக்கு வெளியே பால் இறக்கி வைக்கப்படுவதை காரணமாக காட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அது போன்று ஒரு நிகழ்வு தான் திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் 64வயது பால் முகவரான செல்வராஜுக்கு நிகழ்ந்துள்ளது.

கடந்த 20.09.2018 அன்று தனது கடைக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருந்த பாலில் சுமார் 24லிட்டர் பாலினை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றதை உரிய ஆதாரங்களோடு ஜாம்பஜார் D4 காவல்நிலையம் சென்று அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரையே குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நசிமா என்பவர் மிரட்டி அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு தற்போது வரை அதே காவல் எல்லையில் உள்ள நான்கு பால் முகவர்களின் கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்ட பாலில் சுமார் 150லிட்டர் வரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட பால் முகவர் ஒருவர் ஜாம்பஜார் D4 காவல்நிலையம் எதிரிலேயே பால் வணிகத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாம்பஜார் D4 காவல்நிலையம் எதிரிலேயே பால் திருடு போன அதிர்ச்சியோடும், “ரகசிய கண்காணிப்பு ஒளிப்பதிவு (சிசிடிவி)” காட்சிகளுடன் கூடிய உரிய ஆதாரங்களோடு ஜாம்பஜார் D4 காவல்நிலையம் சென்று அவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது

எனவே பால் திருட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் “புகார் அளித்த வயது முதிர்ந்த பால் முகவரையே மிரட்டியதோடு, ஜாம்பஜார் D4காவல்நிலையம் எதிரிலேயே பால் திருடப்பட்டும் “கொள்ளையர்களை”, கண்டு கொள்ளாத குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நசிமா, உள்ளிட்ட குற்றப்பிரிவு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து பால் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்மநபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும், அத்துடன் திருட்டு பாலினை வாங்குபவர்களையும் அடையாளம் கண்டு அவர்களையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கத்தின் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் மாநில பொருளாளர் எஸ் பொன்மாரியப்பன், மாநில இணைச் செயலாளர்கள் எஸ்.வெங்கடேசபெருமாள், எஸ்.எம்.குமார், எம்.சக்திவேல் ஆகியோர் பாதிக்கப்பட்ட பால் முகவர்களின் சார்பில் “மக்களின் (சென்னை பெருநகர) காவல் ஆணையரிடம் இன்று புகார் கொடுத்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!