Medical Officers Association Demand for Permanent Exemption from NEET Examination to Tamil Nadu

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க நாமக்கல் சுகாதார மாவட்ட கிளை சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புநடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் மோகன் தலைமை வகித்தார். தலைவர் டாக்டர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். துணைச்செயலர் டாக்டர் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றுபேசினார்.

இந்தாண்டு முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் அரசு டாக்டர்கள் பயன்பெறும் வகையில், தகுதித்தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். நிரந்தர தீர்வாக அரசு டாக்டர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர 50 சத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்ர விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், நிர்வாகப்படி, பிற ஊதியப்படிகளை வழங்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வேண்டும்.

மாநில, மாவட்ட அளவில் உள்ள துறை ரீதியான மருத்துவ அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!