Marxist Communist Party of India condemned the central state governments near Namakkal

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், தொண்டிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அக்கட்சியின் கிளை செயலாளர் கே.ராமசாமி தலைமையில் நடைபெற்றது இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏழை எழிய நடுத்தர மக்கள் மிகவும் கடும் பாத்திப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

சிறு குறு தொழில்கள் அழிந்து வரும் நிலையை கண்டித்தும் தொண்டிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் 2018ம் ஆண்டுக்கான வேலைகள் இதுவரை வழங்கப்படவில்லை, கடும் வறட்சி நிலவுவதால் விவசாய வேலையும் கிடைக்கவில்லை.

இதனால், கிராமபுற மக்கள் வாழ்வாதாரத்திற்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, எலச்சிபாளையம் ஒன்றிய ஒன்றியசெயலாளர் சு.சுரேஷ் மற்றும் எம்.கந்தன், குப்புசாமி, முருகேசன் உட்பட கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர், மேலும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சுலைமன்பாஷாவிடம் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!