Many times, there is demand: No Response, the villagers flocked to the lake at their own expense, near Perambalur.

பெரம்பலூர் அருகே ஏரியை தூர்வாற வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால், ஊர் பொது மக்களே தங்களது சொந்த செலவில் ஏரியை தூர்வாறி சுத்தப்படுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தில் ஊருக்கு தெற்கே 15 ஏக்கர் பரபரப்பளவில் மார்க்காய் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 1975 ஆம் ஆண்டிற்கு பிறகு முறையாக தூர் வாரப்படவில்லை என தெறிகிறது. இதனால் ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஏரி முட்புதராக காட்சியளித்தது. இதன் காரணமாக ஏரியில் தண்ணீர் தேங்கிட வழி இல்லாமல் ஏரி முழுவதும் வற்றி பரவாய் கிராமத்தில் நிலத்தடிநீர் மட்டம் முற்றிலும் குறைந்தது.

இதனால் பரவாய் கிராமத்தில் தண்ணீருக்கு பொது மக்கள் மிகவும்சிரமப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பதும் கஷ்டமானது.

இதனை கவனத்தில் கொண்டு, ஏரியை தூர் வாறி தரவேண்டுமென அரசு அதிகாரிகள் மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பொது மக்கள் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் ஏரியை தூர் வார எவ்வித நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி பொது மக்களே ஒன்று சேர்ந்து வீட்டுக்கு வீடு பணம் வசூல் செய்து தூர்வாறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரவாய் கிராமத்திலுள்ள ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள், கோடரி சகிதம் வீட்டிக்கு ஒருவரென புறப்பட்டு சென்று கடந்த 15 நாட்களாக ஏரியை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளதாவது:

பரவாய் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மாக்காயி என்ற மூதாட்டி குழந்தை பேறு இல்லாததால் பரவாய் கிராமத்தின் வறட்சியை போக்கிட அவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ஏரிவெட்டி ஊருக்கு தானமாக வழங்கியதாகவும், அப்போது முதல் கடந்த சில ஆண்டுகள் வரை பரவாய் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதில்லை என்றும், பருவ மழை பொய்த்து போனதாலும்,ஏரியை முறையாக பராமரிக்காததாலும் ஏரி முழுவதும் முட்புதர் மண்டி தண்ணீர் தேங்கிட வழியில்லாமல் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த கிராம மக்கள் ஏரியை சீரமைத்து நீராதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்களின் கோரிக்கையை அரசோ மாவட்ட நிர்வாகமோ கண்டுகொள்ளாததால் வீட்டிற்கு வீடு பணம்
வசூல் செய்து, பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிதி உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியிலுள்ள முட்புதர்களை அகற்றி, வரத்து வாய்க்காலை சீரமைத்து கரையை முடிந்த அளவிற்கு பலப்படுத்தியுள்ளதாவும், பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி பரவாய் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட மார்க்காய் ஏரியை ஆழப்படுத்த அரசு நிதி உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரியை சீரமைக்க வேண்டுமென பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லாததால் தன்னார்வலர்களின் பங்களிப்போடு, பொது மக்களின் முயற்சியால் தூர் வாறப்பட்டுள்ள மார்க்காய் ஏரி போதிய பருவமழை பெய்தால் இன்னும் ஒரு மாத்திற்குள் நிறைந்து ததும்பும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் பரவாய் கிராம மக்கள்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!