Many complains near Perambalur and refuse to remove sewage: special petition does not take place in MCP camp, public pain

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. அதில், மாவட்ட அளவிலான அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதி நேரத்தின் போது அங்கு வந்திருந்த பொதுமக்களில் ஒருவர், அந்த ஊரில் நல்லதண்ணி தெப்பக்குளம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை அகற்ற கோரி உரிய அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும் அகற்ற மறுக்கிறார்கள் என மாவட்ட வருவாய் அலுவலர், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் உரக்க தெரிவித்தார்.

அவரது பேச்சை அரசு பணியாளர்களோ உள்ளிட்ட யாவருமே கேட்காமல் அலட்சியப்படுத்தினர். இவ(ர்)ன் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என நினைத்து கொண்டார்கள் போலும்,

இது குறித்து அப்பகுதி கிராமவாசி தெரிவித்ததாவது:

நீண்ட காலமாக இப்பகுதியில் சாக்கடை தேங்கி நிற்பதால், குடியிருக்கும் தங்களுக்கு கொசு மற்றும் பூச்சித் தொல்லையுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. கடும் சிரமத்துடன் வசித்து வருகிறோம், அரசு அலுலர்களிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லை, அதிகாரிகளிடம் மேல்முறையிட்டும் எந்த பயனும் இல்லை. வரி மட்டும் வாங்கத் தவறுவதில்லை தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது என்பதற்கு இதவும் ஓர் உதாரணம். அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பது ஜனநாயக விரோதம் என்பது தெரிந்தும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். அதிகாரிகள் ஆர்வம் எல்லாம் எந்த திட்டத்திற்கு வேலை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற கோணத்தில் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர்.

அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாவது:

மற்ற துறைகளை அரசு, தனியாருக்கு தாரை வார்ப்பது போல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் பணி, வட்டாசியர், கிராம நிர்வாக அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்ற அலுவலஙகளையும் அரசு தனியாருக்கு குத்தகைக்கு அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ விட்டுவிடலாம் என தெரிவித்தனர். அரசு துறையினர் வாங்கும் சம்பளத்திற்காவது வரி கட்டும், ஜனநாயகத்தின் எஜமானர்களான பொதுமக்களின் அடிப்படை வசதிகளை எதிர்பார்ப்பு இல்லாமல் அர்பணிப்பு நோக்கத்துடன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!