Lumber Store in Perambalur the fire burning in the damage of Rs 65 lakh trees woods

fire-accident பெரம்பலூரில் நள்ளிரவு நேரத்தில் மரக்கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 65 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் கார்த்திக், வெங்கடேஷ், சத்தியமூர்த்தி, சரவணன் என்பவர் உட்பட 5 பேர் கூட்டாக சொந்தமாக ஜெயம் டிம்பர் மார்ட் என்ற மரக்கடையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று விற்பனைக்கு பின் வழக்கம் போல் பூட்டப்பட்ட மரக்கடையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனை உணர்ந்த அப்பகுதி பொது மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தும், அப்பகுதியை வாகனங்களில் கடந்து சென்றவர்களும் சம்பவம் பற்றி அறிந்ததும், அதிர்ச்சியடைந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள், தீ மேலும், பரவு தீ ஜீவாலைகள் பல அடி உயரம் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு, டிம்பர் மார்ட்டின் ஒரு பகுதியிலிருந்த மர இழைப்பகமும், அருகிலிருந்த கார் பட்டரையும் எரிய தொடங்கியது. இதனால் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீணை அணைத்தனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென ஏற்பட்ட அந்த தீடீர் தீ விபத்தில் சுமார் 65 லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் மற்றும் மிஷின்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், மரக்டைகயில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!