dmk-stalin@kunnam பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராசா தலைமை வகித்தார். திமுக கூட்டணி கட்சியான சமூக சமத்துவபடை கட்சி வேட்பாளர் சிவகாமி (பெரம்பலூர் ), குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ், அரியலூர் தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர் ஆகியோர் பேசினர்.

இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை நிச்சயமாக, உறுதியாக, சத்தியமாக வெற்றிப்பெறவைப்பீர்களா என கேட்டார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி ஒரு சிலர் வருவார்கள். 2011ல் அதிமுக ஆட்சி அமைத்து முதல்வராக பதவியேற்றபின்னர் ஜெயலலிதா 5 வருடத்தில் ஒருநாளாவது குன்னத்திற்கு வந்தரா? ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அந்த பிரச்சார கூட்டத்திற்கு கூட்டத்தை கூட்டுகின்றனர். ஆனால் இங்கு கூடிய கூட்டம் பேட்டா, சாப்பாடு, பலானபலான எதுவும் இல்லாமல் தானாக கூடிய கூட்டம். ஜெயலலிதா பொய்யாகவே பேசுகிறார். அண்டபுழுகு ஆகசபுழுகு என்பது போல் உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் பெரம்பலூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, அரசினர் பாலிடெக்னிக், ஐடிஐ, வேப்பந்தட்டைக்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டம், விசுவக்குடி நீர் தேக்க திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டது.

குன்னம் தொகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்க உத்தரவிட்டு அடிக்கால் நாட்டப்பட்டது. ஆனால் அடுத்த வந்த அதிமுக ஆட்சி அதனை கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைத்தவுடன் மருத்துவக்கல்லூரி துவங்கப்படும்.

ஜெயங்கொண்டத்தில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். முந்திரி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அதிமுக ஆட்சியில் 60 சதவீத முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முதியோர்களுக்கு மட்டும் முதியோர் உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆட்சியில் விவசாயிகளின் டிராக்டர் ஜப்தி செய்யும் கொடுமை அதிமுக ஆட்சியில் தான்.

திமுக தேர்தல் அறிக்கையில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும், செந்துறையில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும், சின்னமுட்லு நீர்தேக்க திட்டம் கொண்டு வரப்படும், கொள்ளிடம் ஆற்றில் 6 இடங்களில் தடுப்பணை கட்டவேண்டும் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர் போன்ற பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பொதுமக்களையும் முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கவில்லை. அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதியில் கூட நான் தான் சென்று வெள்ளத்தால் பாதித்தப்பகுதிகளையும், பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். ஆனால் முதல்வர் ஜெயலலிதா வேனில் சென்று வேனைவிட்டு கிழே இறங்காமல் பார்வையிட்டு சென்றார்.

ஜெயலலிதாவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் ஒழுங்காக பேசாமல் பிதற்றுகிறார். செம்பரபாக்கம் ஏரி திறப்பு பிரச்சனை
குறித்த திமுகவினர் தின்னை பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் விநியோகம் செய்து வருகின்றனர்.

இதனால் ஜெயலலிதா பயந்து போய் உள்ளார். இந்த ஏரி காலதாதத்தால் திறந்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் 347 பேர் இறந்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு சவால் விடுகிறேன். செம்பரபாக்கம் ஏரி திறப்பு விவாகரம் குறித்து விசாரணை நடத்த தயார் . நான் ரெடி, நீங்க ரெடியா? என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள், வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்.

ஜெயலலிதா மதுவிலக்கு பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை என்கிறார். 1974ல் மதுக்கடைகள் மூடிய போது அதனை திறந்து அதிமுக ஆட்சி தான். 29.11.2003ல் அரசே மதுவை விற்கலாம் என கையெழுத்து போட்டவர் ஜெயலலிதா தான்.

ஒரே கையெழுத்து போட்டு மதுக்கடைகளை மூடியவர் கருணாநிதி. ஆனால் வீதி வீதியாக மதுக்கடைகளை திறந்தவர் ஜெயலலிதா. புலியை பார்த்து பூனை சூடுப்போட்டுக்கொண்டது போல் உள்ளது. கடந்த 5 வருடமாக மதுக்கடைகளை மூட முடியாத ஜெயலலிதா தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என்கிறார்.

காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பேசும்போது திமுக பூரண மதுவிலக்கு என கூறவில்லை என்கிறார். மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்படும் என்றாலே பூரண மதுவிலக்கு தான்.

டாஸ்மாக் கடை அகற்றப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும். மாவட்டந்தோறும் மறுவாழ்வு அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறிதியில் குறிப்பிட்டுள்ளோம்.

திமுக ஆட்சி அமைத்தால் யார் குற்றம் செய்தாலும் தண்டனை விதிக்கும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை உருவாக்கப்படும். மாணவ,மாணவிகளின் கல்விக்கடன் தள்ளுப்படி செய்யப்படும்.

விவசாயிகளின் விவசாய கடன் தள்ளுப்படி செய்யப்படும். அந்த சத்துணவு திட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் முட்டை போடப்பட்டது. இந்த தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முட்டையுடன் பால் வழங்கப்படும் என்றார்.

பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும். மின் கட்டணம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை கட்டும் விதிமுறை அமுல்படுத்தப்படும் என திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுபோட்டு திமுகவை ஆட்சியில் அமைக்கவேண்டும் என்றார்.

கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், வக்கீல் தமிழ்ச்செல்வன்,

திமுக பிரமுகர்கள் : பெரம்பலூர் நகரசெயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), மதியழகன் (வேப்பூர்), நல்லதம்பி (வேப்பந்தட்டை) ,

மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் செந்தில்நாதன், மகாதேவி ஜெயபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!