Kumbabhishegam festival of Bala subramaniya swamy Temple of Velipattinam in Ramanathapuram

ராமநாதபுரம் வெளிபட்டிணம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக வெகு சிறப்பாக நடந்தது.

ராமநாதபுரம் வெளிபட்டிணம் தெற்கு ரதவீதியில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ராமநாதபுரம் வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி, வள்ளி, தேவசேனா, சமேத கல்யாண சுப்ரமண்யர், நவக்கிரஹம் மற்றும் அனந்த ஆஞ்சநேய சுவாமிகள் திருக்கோவில் திருப்பணிகள் நடந்தது.

திருப்பணியை தொடர்ந்து பாலசுப்பிரமணியசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா விநாயகர் புஜையுடன் தொடங்கி கணபதி ஹோமம், நலவக்கிரஹ ஹோமம், தொடர்ந்து 3 கால யாகசாலை புஜையும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் கடம்புறப்பாடுடன் கானாடுகாத்தான் ராமசாமி பட்டர் தலைமையில் பைரவசிவம் பட்டர் உள்ளிட்ட வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் கும்பம் முக்கியஸ்தர்கள் கொண்டு வர வானத்தில் கருடன் வட்டமிட காலை 10.15 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மஹா அபிஷேகம் சிறப்பு ஆராதனைகள் நடந்தன.மாலை 6.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்மணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

விழா ஏற்பாடுகளை ராமசந்திர சுவாமிகள் தலைமயில் கார்த்திகை வழிபாட்டு குழுவினர், ஆனந்த ஆஞ்சநேயர் வழிபாட்டு குழுவினர் மற்றும் தமிழ்நாடு வ.உ.சி. நலப்பேரவை தென்மண்டல தலைவர் பாலா, செயலாளர் தங்கதிரு, முருகன், மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், ஜெயபாண்டியன், சண்முகநாததுரை உட்பட பலர் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!