It is not unacceptable to attend M.K. Stalin’s position at Kumaraswamy’s Swarn that Cauvery water will not give a drip to Tamil Nadu! : PR.Pandian

காவிரி நீரை தமிழகத்திற்கு ஒரு சொட்டுக் கூட விடமாட்டேன் என தேர்தல் அறிக்கை வெளியிட்டவர் குமாரசாமி .அவர் பதவியேற்கும் விழாவில் திமுக செயல் தலைவர் மு.கIஸ்டாலின் பங்கேற்ப்பது ஏற்கதக்கதல்ல மறுபரிசீலினை செய்ய வேண்டும், என பி.ஆர்.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் காவிரி உரிமைக்கான போராட்டத்தில் அனைவரும் ஒத்தக் கருத்தோடு ஒன்றினைந்து போராடியதின் விளைவு தமிழகத்திற்கு பாதகமான சில அம்சங்கள் இருந்தாலும் கிடைத்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

மே இறுதிக்குள்ளாக ஆணையம் அமைத்து மத்திய அரசிதழில் வெளியிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாண்டு உரிய தண்ணீரை பெற்று ஜூன் 12ல் மேட்டூர் அனை திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஆணையம் தான் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய நீர்வளத்துறை செயலாளர் UP சிங்கை சந்தித்து துரிதப்படுத்துவதற்க்கான பூர்வாங்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

காவிரி நீரை ஒரு சொட்டுக்கூட தமிழகத்திற்கு தரமாட்டேன் என்று தனது கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டவர்தான் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி,

நேற்று (21.05.2018) ஸ்ரீரங்கத்தில் பத்திரிக்கையாளர்களிடமும் சாமியை வேண்டிக் கொள்வோம் மழை பெய்தால் தமிழகத்திற்கு தர முடியும் என்று கிண்டலடித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் பதவியேற்பு விழாவில் திமுக செயல் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பது ஏற்கதக்கதல்ல. பங்கேற்பது குறித்து மறுபரிசீலினை செய்திட விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறேன் என்றார்.

மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் சு.செந்தில்குமார் உடன் இருந்தார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!