It is not a candidate to win a parliamentary election! Double leaf symbol; R. Ramachandran MLA talks

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் பேரூர் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பேரூர் நிர்வாகிகள் பழனி முருகேசன், ராமையா, கணேசன் இளங்கோவன் ,செந்தில்குமார், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்பி மருதராஜா, எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் தேவராஜன் உள்பட பலர் பேசினர்.

மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் அதிமுக உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி பேசியதாவது:

அதிமுக அரசின் சாதனைகளை வீடுதோறும் சென்று பொது மக்களிடம் எடுத்துக் கூறி அதிமுகவிற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அதற்கேற்ற வகையில் அதிமுக பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும்.

இரட்டை இலை சின்னம் எங்கிருக்கிறதோ அங்குதான் நாம் இருக்க வேண்டும், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னறற்ற கழக கொடி எங்கிருக்கிறதோ, அங்குதான் நாம் இருக்க வேண்டும், மீண்டும் சொல்லுகிறேன்; இரட்டை இலை சின்னத்தை தோற்கடிப்பேன் சொல்லுகின்ற திமுகவினர் நமக்கு எப்படி எதிரியோ, அது போல இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து குக்கரை வெற்றி பெற செய்வேன் என்கின்ற அந்த குள்ளநரி டிடிவி தினகரனும் நமக்கு எதிரிதான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

இப்பொழுது கமிட்டி அமைக்கின்ற விவரத்தை எடுத்துரைக்கிறேன். கரை வேட்டி கட்டிக் கொண்டிருக்கும் தீவிர தொண்டர்களையே பூத் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கவேண்டும், அதில் பெண்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும், ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் கமிட்டியில் இடம் பெறக்கூடாது, 18 பேரும் தனித்தனிநபர்களாக இருப்பதோடு, தனித்தனி குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், எவ்வளவு தீவிர கட்சி உறுப்பினராக இருந்தாலும், குடும்பத்திற்கு ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில், நமது கழகத் தலைமை யாரை பாராளுமன்ற வேட்பாளராக அறிவித்தாலும், வெற்றி பெறச் செய்யப்போவது, அந்த வேட்பாளரை அல்ல, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின், கட்டிக் காத்த, இதய தெய்வத் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், தந்துச் சென்ற, நாம் இவ்வளவு காலம் விரும்பி தலைமையாக ஏற்ற இரட்டை இலைச் சின்னத்தை வெற்றி பெறச் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு, இரட்டை இலை சின்னத்தை வெற்றிச் சின்னமாக மீண்டும் ஜொலிக்க வைக்க வேண்டும், இதுவே புரட்சித் தலைவி அம்மாவிற்கு நாம் செய்யும் மனநிறைவான காணிக்கையாக எண்ண வேண்டும் என பேசினார். கூட்டத்தில், மாவட்ட அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!