It is a strange ceremony to blow out the ghost near Namakkal! Thousands of women participate

நாமக்கல் அருகே அச்சப்பன் கோவில் திருவிழாவில், பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், பவித்திரம் கிராமத்தில் பிரசித்திபெற்ற அச்சப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் விஜயதசமி அன்று அன்று சிறப்பாக திருவிழா நடைபெறும். குரும்பா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பெரும்பாலும் இந்த விழாவில் கலந்துகொள்வது வழங்கம்.

நேற்று நடைபெற்ற விழாவில் நாமக்கல் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான குரும்பா சமூகத்தினர் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சியில், திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், துஷ்ட ஆவியால் பாதிக்கப்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பலர் ஏற்கனவே தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கைகளை மேலே தூக்கிப்பிடித்தபடி, தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர்.

கைதூக்கியிருந்த பக்தர்களை, கோமாளி வேடமிட்ட நபர் மற்றும் அச்சப்பன் கோவில் பூசாரி ஆகியோர் சுவாமி அருள் வந்ததும் பிரம்மாண்ட சாட்டையை சுழற்றி, ஆக்ரோஷமாக ஆடியடி பெண்களுக்கு சாட்டையடி கொடுத்தனர்.

ஒரு சில பெண்கள் ஒரு அடி வாங்கியதும் எழுந்து சென்றனர். சிலர் இரண்டு, மூன்று அடி வாங்கிச் சென்றனர். இதன்மூலம் தங்களைப் பிடித்த துஷ்ட ஆவி உள்ளிட்டவை நீங்கும் என்பது, பொதுமக்களின் நம்பிக்கை.

பெரிய சாட்டையால் அடித்தாலும் காயம் ஏற்படாது. சாட்டை அடி விழுந்தவுடன துஷ்ட ஆவி விலகும். அதுபோல், நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. சாட்டையடி பெறுவோர் கோவிலுக்கு சென்று தீர்த்தம், பிரசாதம் பெற்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேய் விரட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது தவிர, ஆடு பூ தாண்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான குரும்பா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் நேற்று அச்சப்பன் கோவிலில் கூடி பல்வேறு பூஜைகள் செய்தும், ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டும் சுவாமியை வழிபட்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!