Interview for employment opportunities for young people: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு தீன் தயாள் உபத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் (DDU GKY) இலவச வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற் பயிற்சிக்கான தேர்வு முகாம் 26.11.2018 அன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,

27.11.2018 அன்று வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 28.11.2018 அன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் 29.11.2018 அன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

இம்முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சென்னை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பல நகரங்களில் செயல்பட்டு வரும் டி.வி.எஸ், கே.கே.எம், பென்சன் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வளர்ச்சி சங்கம், திருப்பூர் ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்களின் மூலம் டேலி, டெய்லரிங், எலக்ட்ரிசியன், பியூட்டிசியன், நர்சிங், வேளாண் உற்பத்தி பொருட்கள் தயாரித்தல்,

கம்ப்யூட்டர் ஹார்டுவேர் உதவியாளர், டிசைன் இன்ஜினியர், பேஸன் டிசைனர் போன்ற பல்வேறு பயிற்சிகள் 6 மாத காலம் வரை உண்டு உறைவிட பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு தேர்வு செய்யபடுபவர்களுக்கு உணவு, தங்குமிடம், சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.

மேற்படி பயிற்சிக்கு 1130 நபர்கள் நேர்காணல் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளதால் 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள் குடும்ப அட்டையின் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும்.

மேலும், விபரங்களுக்கு உதவித் திட்ட அலுவலர் அலுவலகத்தை 9444094325 என்ற அலைபேசி எண்ணிலும், மகளிர் திட்ட அலுவலகத்தை 04328 225362 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!