Instead, the Government of the People’s ideas may not be sterile affair: Minister Thangamani

நாமக்கல்லில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார்.

திமுக ஆட்சியில் விவசாயிகளின் போராட்டத்தின் போது 16 பேர் சுட்டு கொல்லப்பட்டபோது, முதல்வராக இருந்த கருணாநிதி அப்போது முன்னுதரணமாக இருந்தாரா? என்பது தான் எங்களது கேள்வி. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களின் எண்ணத்திற்கு மாறாக அதிமுக அரசு என்றைக்கும் இருக்காது.

தூத்துக்குடியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை பணிகள் நடைபெறுகின்றன. மற்றபடி அமைச்சர்கள் அங்கு செல்ல அச்சமில்லை. மற்ற அரசியல் கட்சியினர் அரசியல் செய்வதற்காக அங்கு செல்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முன்னோட்டமாக தான் முதலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, படிப்படியாக தான் எதையும் செய்ய முடியும். பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் மின்சார வாரியத்திற்கு ரூ.ஆயிரம் கோடி அளவிற்கு மின் கட்டண பாக்கியுள்ளது.

மானியக் கோரிக்கைகள் வரும்போது அந்தந்த துறைகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர். கோடை காலம் என்பதால் இந்தியா முழுவதும் நிலக்கரி தேவை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியினை வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம். தற்போது 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி உள்ளது. மேலும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஒரு வார காலமாக தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை தமிழகத்தில் பெய்து வருவதால் மின் சாதனப் பொருட்கள் சேதமடைகின்றன. அவற்றினை சரிசெய்ய இரவும் பகல் பாராமல் மின்வாரிய ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர் என தெரிவித்தார். பேட்டியின் போது சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!