Increase in circulation of counterfeit banknotes in Perambalur, traders, bankers fear !!

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது புதிய ரூ.200 நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் மர்ம நபர்கள் விட்டு வருகின்றனர்.

திருவிழா காலங்கள் என்பதால் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவனிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை அப்படி எண்ணி வைத்து கொள்கின்றனர்.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தும் கள்ள நோட்டுக்கள் மாற்றும் கும்பல் கைவரிசையை தீவிரமாக காட்டி வருகிறது. இதனால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், சிறுவியாபாரிகள் வங்கிகளில் மொத்த பணத்தை செலுத்தும் போது கள்ள நோட்டுகனை காசாளர்கள் கண்டுபிடித்து திருப்பி அனுப்புகின்றனர்.

வணிகர்கள் அந்த நோட்டுகளை வைத்து கொண்டு அல்லாடி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் கள்ள நோட்டு மாற்றும் கும்பலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள், வங்கியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளநோட்டுகளால், நாட்டிற்கு பெரிய அளிவிலான பொருளாதார பாதிப்பு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!