In Perambalur District Farmers Production Committee Meeting and Meeting Day Grievance Redressal

farmers-redressal பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்ட உற்பத்திக் குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகளில் தூர் வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரிகளுக்கு வரும் தண்ணீர் வரும் வாய்க்கால் வழித்தடங்களை அகலப்படுத்தி சரிசெய்து தர வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ஆலையை நவீனபடுத்தும் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரும்பு அரவைக்கான தொகை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

அனைவருடைய கோரிக்கைகளுக்கும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களின் முறையான விளக்கங்களை அளித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

வேளாண்மைத்துறை, வேளாண்மைபொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்;பட்டு வருகின்றது. எனவே விவசாயிகள் அரசு அறிவிக்கின்ற சொட்டு நீர்ப்பாசன திட்டம், பசுமைக் குடில் மற்றும் மானிய வலையில் வழங்கப்படும் விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு இத்திட்டங்களின் மூலமாக தங்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ள அனைத்து விவசாயிகளும் முன் வர வேண்டும். எனவே, விவசாயிகளுக்கு மேற்கண்ட திட்டங்கள் குறித்து உங்கள் பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை அலுவலர்களையோ, அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணைஇயக்குநர் அலுவலரையோ நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
என பேசினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் அதன் சகோதரத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் திட்ட விளக்கவுரையாற்றினார;கள்.

அதனை தொடர்ந்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ ஆகும். 2015-ம் ஆண்டு 1109.24 மி.மீ மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் 2016 வரை 290.00 மி.மீ மழை பெய்துள்ளது. எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழையை பொருத்து விவசாயிகள் பருத்தி மற்றும் மக்காச்சோளம் விதைப்பை துவங்குவார்கள்.

விசுவக்குடி நீர்தேக்கத்தில் 5.45Mcft உள்ளது. மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 73ஏரிகளில் 23 ஏரிகளில் வெட்டுக் குழியல் நீர் உள்ளது. பஞ்சாயத்து யூனியன் ஏரிகள் 305-ல் 86 ஏரிகளில் வெட்டுக்குழியில் நீர் உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உணவு தானியம் உற்பத்தி இலக்கு 2016-17-ம் ஆண்டுக்கு 5.70 இலட்சம் மெட்ரிக் டன்கள். மாவட்டத்தில் தற்போது நெல் 284 எக்டரிலும், கம்பு 156 எக்டரிலும், மக்காச்சோளம் 4383 எக்டரிலும், சோளம் 211 எக்டரிலும், உளுந்து 159 எக்டரிலும் பயிரிடப்பட்டுள்ளது.

எண்ணெய்வித்து பயிர்கள் 302 எக்டரிலும், பருத்தி 3800 எக்டரிலும் மற்றும் கரும்பு 4306 எக்டரிலும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மொத்த பயிர் சாகுபடி செய்துள்ள பரப்பு 13061 எக்டர் ஆகும்.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 175.750 மெ.டன், பயறுவகை விதைகள் 7.011 மெ.டன், நிலக்கடலை 6.417 மெ.டன் உள்ளிட்ட விதைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாரில் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் யூரியா 1252 மெ.டன், டி.ஏ.பி. 1362 மெ.டன், பொட்டாஷ் 680 மெ.டன் மற்றும் கூட்டுரம் 3186 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது என்றும் விவசாயிகள் வாங்கி பயனடையுமாறும் வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.

விவசாய சங்க பிரதிநிதிகள் எஸ்.முருகேசன், இராஜாசிதம்பரம், ஏ.கே.ராஜேந்திரன், ராமசாமி, திஏ.பெருமாள் மற்றும் பி.ரமேஷ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் 11 நபர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை திட்டங்களால் பயனடைந்த விவசாயிகள் மற்ற விவசாயிகளுக்கு தாங்கள் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர;. அதனடிப்படையில் கண்ணப்பாடியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அரசு மானியம் ரூ.6.00 இலட்சம் உட்பட ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் பசுமைக்குடில் அமைக்கும் திட்டத்தின் கீழ் தரமான காய்கறிகள், பழங்கள் உற்பத்தி மற்றும் காய்கறிகள், பழங்கள் நாற்றாங்கால் அமைத்து அதன் மூலமாக தரமான காய்கறிகள், பழங்களின் செடிகளின் கன்றுகளை உற்பத்தி செய்து, அதன் மூலமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது குறித்தும், அதேபோல குரும்பலூரை சேர்ந்த குமார் என்பவர் அரசு மானியம் ரூ.8.9 இலட்சம் உட்பட ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் தனது வயலில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் மூலமாக குறைந்த நிலப்பரப்பில், குறைந்த செலவில் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டு அதன் மூலமாக பயனடைந்து வருவதை குறித்து விளக்கினர்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர், பி.சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) சு.இராஜசேகரன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் நா.ராஜேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர் இராஜாமணி, மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2009 & 2015 - © 2018 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!