In Perambalur district collector visited the local election process for duty!

collector-perambalur-visit பெரம்பலூர் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்கள் பெறுவது குறித்தும், பெரம்பலுர், ஆலத்தூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் குரும்பலூர், லப்பைகுடிகாடு பேரூராட்சி அலுவலகங்களில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான க.நந்தகுமார் இன்று நேரில் பார்வையிட்டார்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான வேட்பு மனுக்களை விண்ணப்பிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகளையும், சம்மந்தப்பட்ட அலுவலகங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்திடும் வகையில் தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அனைவரும் கடைபிடிக்கவேண்டும்,

தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை பெறவேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தேர்தல் குறித்த இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதிமுக அமைச்சரிடம், நேர்மைக்கு புறம்பாக பட்டியலை ஒப்படைத்தவர் பெரம்பலூர் கலெக்டர் நந்தக்குமார். ஆனால், இவர் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்துவார் என்பது சந்தேகத்திற்கு உரியதே! மேலும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பிற கட்சிகள் என பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார் என்ற குற்றச் சாட்டும் தற்போது எழுந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!