In Perambalur Co-optex sales at clothing buy two get one free

பெரம்பலூர்: சுபமுகூர்த்த பட்டு விற்பனையில் தனக்கென ஒரு சந்தையினை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப வடிவமைப்புகளையும், வண்ணக் கலவைகளிலும் வெளியிடுவதன் மூலம் கோ-ஆப்டெக்ஸின் பட்டு புடவைகளை வாடிக்கையாளர்கள் அதிக அளவு வாங்குவது அதிகரித்து வருகிறது. அதன்படி பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இரண்டு ஆடைகள் வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனைத் திட்டத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா, இன்று குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்திய ஜவுளி சந்தையில் 82 ஆண்டுகாலமாக பிரதான பங்கு வகித்து வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வர்த்தகரீதியில் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், நெசவாளர்களின் வாழ்வு மேம்படவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இரண்டு ஆடைகள் வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனைத் திட்டம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தி ரகங்களில் புதுமையினை புகுத்தி எண்ணற்ற ரகங்களில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், பருத்தி சேலைகளை வாங்கும் விலையில் நியாயமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில், பருத்தி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் வாங்குவது பல்வேறு வாடிக்கையாளர்களின் குடும்ப வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி இன்று முதல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், மதுரை, சேலம் ஆகிய பகுதி நெசவாளர்களின் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்ட இயற்கை சாயமிட்ட கைத்தறி பருத்தி கைத்தறி சேலைகளும், நெகமம் சேலைகளும், செட்டிநாடு சேலைகளும் மற்றும் கூறைநாடு சேலைகளும் கண்கவரும் விதத்தில் ஜெயகார்த்திகா சேலைகளும், கோ-ஆப்டெக்ஸின் புதிய வரவாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களுக்கான 100 சதவீத பட்டுச் சட்டைகள் மற்றும் 100 சதவீத பருத்திச் சட்டைகளும், லினன் காட்டன் சட்டைகளும் அழகிய வண்ணத்தில் விற்பனைக்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் தஞ்சை மண்டலத்தில் ரூ.246.39 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு ரூ.300.00 லட்சத்திற்கு விற்பனைக்குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த விற்பனை நிலையத்தில் மட்டும் விற்பனை ரூ.6.70 லட்சம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு ரூ.8.00 லட்சத்திற்கு விற்பனைக்குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் தஞ்சாவூர் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்.மாதேஸ்வரன், திரு.டி.சூரியநாராயணா, இரக மேலாளர், ஏ.சங்கர், பெரம்பலூர் விற்பனை நிலைய ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!