In Namakkal district, the Plus 1 examination of 17 government schools has passed 100 percent

பிளஸ் 1 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 16 அரசு பள்ளிகள், ஒரு அரசு உதவிபெறும் பள்ளி, 46 தனியார் பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகள் 100 சத தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசுப்பள்ளிகள் விவரம்:

தண்ணீர்பந்தல்பாளையம், பாச்சல், பாண்டமங்கலம் மகளிர், குள்ளநாயக்கன்பாளையம், கரிச்சிப்பாளையம், பிலிக்கல்பாளையம், பல்லக்காபாளையம், விட்டம்பாளையம், வரகூர், பெரியமணலி, பழையபாளையம், கபிலர்மலை, என்.புதுப்பட்டி, பொத்தனூர், காவக்காரபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள், ராமாபுரம் மாதிரி பள்ளி, எதிர்மேடு சமூக நலத்துறை பள்ளி என மொத்தம் 17 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதுதவிர மாவட்டத்தில் 46 தனியார் பள்ளிகள் 100 சத தேர்ச்சி பெற்றுள்ளன.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 22,867 மாணவர்களில், 21,859 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,008 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் 77 மெட்ரிக் பள்ளிகள், 22 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 99 தனியார் பள்ளிகளில் 46 பள்ளிகள் மட்டுமே 100 சத தேர்ச்சியை பெற்றுள்ளன.

மொத்தமுள்ள 87 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 17 பள்ளிகள் 100 சத தேர்ச்சியை பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 70 பள்ளிகளில் 766 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

மெட்ரிக் மற்றும் சுயநிதிபள்ளிகளை பொறுத்தவரை மொத்தமுள்ள 99 பள்ளிகளில் 46 பள்ளிகள் 100 சத தேர்ச்சியை பெற்றுள்ளன. மீதியுள்ள 53 பள்ளிகளில் 141 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!