In Gutka case, the bailer committed suicide by hanging himself

பரமத்தி வேலூர் அருகே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள வடக்கு நல்லியாம்பாளையம் அருகே உள்ள சுண்டப்பானை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சரக்கு ஆட்டோக்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ஆட்டோக்களில் 42 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு சரக்கு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து, பரமத்தி வேலூர் பாரதி நகரைச் சேந்த மினி ஆட்டோ டிரைவர்களான விக்னேஷ் (22), கரூர் மாவட்டம் மண்மங்கலம், மோதுக்காடு பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (24) மற்றும் பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் (39) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இதேபோல் கீழ்பாலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 குட்கா மூட்டைகள் மற்றும் 6 பெட்டிகள் கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக ப.வேலூர் கண்டர் நகரைச் சேர்ந்த விஜய் (எ) ராமலிங்கம் (35) என்பவரை மோகனூர் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் நால்வரும் போலீசார் விசாரணைக்கு பின்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஜாமீனில் வந்த பரமத்திவேலூர் கண்டர் நகரைச் சேர்ந்த விஜய் (எ) ராமலிங்கம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அவர் வீட்டின் கூரையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்த அவரது மனைவி புனிதா (32) ப.வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!