Hurricane winds in Kovilpatti area: falling trees and damaging electricity

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மாலை முதல் பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ததது. மேலும் சில இடங்களில் ஆலங்கட்டி மழையாகவும், சில இடங்களில் பயங்கர சூறவாளிக்காற்றுடன் கூடிய மழை பெய்ததது, இந்த மழையின் காரணமாக மந்திதோப்பு – குருமலை சாலையில் இருந்த மரம் ஒன்று தீடீரென சரிந்து அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் வயர் மற்றும், கீழ்நிலை நீர் தேக்க தொட்டி மீது விழுந்தது.

மின்சார டிரான்ஸ்பார்மரில் மரம் விழுந்த காரணத்தினால், மந்திதோப்புசாலை, கொச்சிலாபுரம் விலக்கு மற்றும் கொச்சிலாபுரம் பகுதியில் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது. மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து , சரிந்து விழுந்த மரத்தினை அகற்றி மீண்டும் மின்விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யதனர்.

பலத்த காற்று வீசியதால் மந்திதோப்பு பகுதியில் விவசாயிகள் பயரிட்டு இருந்த சீனி அவரைக்காய் செடிகள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!