Heavy rainfall in the areas of Perambalur, lightning: the banana trees also fall  

பெரம்பலூர் மாவட்டத்தில், வாலிகண்டபுரம், மங்களமேடு, திருமாந்துறை, ஒதியம், சித்தளி, குன்னம், மேலமாத்தூர், மருதையான் கோவில் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை பல்வேறு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்தது.


கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் வெப்பம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் தங்களது இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோடை மழை பெய்யாதா என ஏங்கித் தவித்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது விவசாயிகள் தங்களது வயலில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் குலை தள்ளிய வாழைகள் அனைத்தும் ஒடிந்து கீழே விழுந்தது.

குறிப்பாக பெரிய வடகரையை சேர்ந்த விவசாயி மாணிக்கம் என்பவர் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் கீழே விழுந்து நாசமானது. இதே போன்று பல்வேறு விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் கீழே சாய்ந்து சேதம் அடைந்து உள்ளது.

எனவே தமிழக அரசு சேதமடைந்துள்ள வாழைகளை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேப்பந்தட்டை தாலுகா பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ) : பெரம்பலூர் 25, வேப்பந்தட்டை 26, தழுதாழை 48, பாடாலூர் 59, செட்டிக்குளம் 26, எறையூர் 2, லப்பைக்குடிக்காடு 5, அகரம்சீகூர் 0, கிருஷ்ணாபுரம் 15, வி.களத்தூர் 28, புதுவேட்டக்குடி 0, என மொத்தம் 234 மி.மீ பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.27 மி.மீ ஆகும் .


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!