Hanuman Jayanti: In Perambalur the padalur, terani special prayers in various towns

பெரம்பலூர் மாவட்டம், பாடாலுரில் உள்ள பூமலை சஞ்சீவிராயர் மலையில் ஹனுமன் கோவில் உள்ளது.

இன்று ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு பூஜைகள், வடமாலைகள் சாத்தப்பட்டும், மலர் மாலை அணிவிக்கப்ட்டும் சிறப்பு அலங்காரத்திலும் இன்று ஹனுமன் காட்சியளித்தார்.

பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் உள்ள அனுமார் சிலைகளுக்கு அலங்காரம் செய்து வடைமாலை அணிவிக்கப்பட்டது.

அஞ்சனை என்னும் கந்தர்வப் பெண்ணிடம் வாயுவின் அனுக்கிரகத்தால் உதித்ததால் ஆஞ்சநேயர் எனப் பெயர் பெற்றார் எனக் கூறப்படுகிறது.

அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும் என்பதும் ஐதீகம்.

இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும்போது சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது ஆசியைப் பெறலாம்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் குழந்தை பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும், குறிப்பாக சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும் என்பதும் நம்பிக்கை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!