Gram Sabha meeting on Gandhi’s birthday

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

வரும் அக் 2 நாள் காந்தி பிறந்த தினமான அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், அதற்கான தனி அலுவலர்கள் மற்றும் மண்டல மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களால் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அதில், போதுமக்கள் முன்னலையில் தீர்மானங்கள், மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 2016-17 ஆண்டிற்கான கிராம ஊராட்சிக்கான தணிக்கை அறிக்கை வெளியிடுதல்,

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான சமூக தணிக்கை அறிவித்தல்
கிராம ஊராட்சிக்கான வளர்ச்சித் திட்டங்கள் ஒப்புதலுக்கு சமர்ப்பித்தல்
சுத்தமான பசுமை ஊராட்சி தெருக்களுக்கான வரைபடம் தயாரித்தல்
தேர்ந்தெடுக்கப்பட்ட திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளை அறிவித்தல்
வட்டாரத்தில் உள;ள கயீராம ஊராட;சயீகளயீல; பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்ட ஒரு கிராம ஊராட்சியை அறிவித்தல்.
அதனை தொடர்ந்து கிராம வளம் மற்றும் தூய்மைக்கான , இரு வார இயக்கம் 01.10.2017 முதல் 15.10.2017 முடிய உள்ள 15 நா£களில் கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பின்வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
1. சுகாதாரம் மற்றம் சுத்தமான குடிநீர் வழங்கல்
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
3. ஊரக குடியிருப்பு – பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்)
4. பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்
5. வங்கி தொடர்பு / பணமில்லா பரிமாற்றல் மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு ஏற்படுத்துதல்
6. ஊராட்சி சுத்தம் குறித்தான மகளிர் குழுக்களின் நடவடிக்கைகள்
7. தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் முன்னேற்ற திட்டம்
8. மாற்றுத் திறனாளயீகள் / முதியோர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு அவர்கள் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வு
9. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுக் கட்டிடங்கள் / அனைவருக்குமான தனி நபர் சுத்தம் / பொது கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் / தண்ணீர் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு.

இதனை தவிர குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல்,

ஊராட்சியின் 2016-17-ஆம் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு ஆகியவை கிராம சபைக்கு முன் சமர்பித்தல் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்றுதல் குறித்து விவாதித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல்.

கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்தல் மற்றும் ஒத்துழைப்பை நல்கிட உறுப்பினர்களிடம் கோருதல், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் வாசித்து இவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் எடுத்து செய்ய ஆலோசித்தல்,

திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தல், ஒருங்கினைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஒருங்கினைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் பராமரிப்பு மற்றும் அவற்றின் தொடர் செயல்பாடு குறித்து விவாதித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல்,

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், சமூக தணிக்கை, மகளிர் திட்டம் குறித்து விவாதித்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் நதிகளை மீட்போம், பாரதம் காப்போம், நதிகளை மீட்க ஆதரவளிப்போம் போன்றவை உள்ளிட்ட பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது.

கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களால் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

காந்தி பிறந்த தினமான 02.10.2017 அன்று கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!