Gandhi, who had bought the picture, giving the freedom to draw up the bucks for buying alcohol tragedy: Kumari Ananthan distress

நாமக்கல் : நாட்டிற்காக சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மகாத்மா காந்தி படத்தை போட்ட ரூபாய் நோட்டை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கும் அவலநிலை உள்ளது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன் வேதனை தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி பொன் விழா ஆண்டை முன்னிட்டு கவிஞரின் 130 வது பிறந்த நாள் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன், விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:

பாரதி இல்லையே என்ற குறையை போக்க வந்தவர் நாமக்கல் கவிஞர் என ராஜாஜி கூறியுள்ளார். அத்தகையை பெருமை மிகுந்த கவிஞருக்கு நாமக்கல்லில் சிலை இல்லை. இந்த கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

அண்ணா கல்லூரி வளாகத்தில் அண்ணா சிலை இருக்கிறது. வெளியிலும் இருக்கிறது அல்லவா. அதுபோல் கவிஞருக்கு கல்லூரியில் சிலை இருக்கட்டும், அதே சமயத்தில் வெளியில் பொது இடத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் சிலை இருக்க வேண்டும். அரசு இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது அரசிடம் இடத்தை கேட்டு வாங்கி கவிஞருக்கு சிலை அமைக்கும் பணியை கவிஞர் மீது பற்றுள்ளவர்கள் செய்ய வேண்டும்.

1977 ம் ஆண்டு நான் முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அவைக்கு சென்ற போது, அங்கு தமிழில் வினா எழுப்ப எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அவையில் வினா எழுப்ப முற்பட்டதால், 1978 ம் ஆண்டு நவம்பர் 20 ம் தேதி தமிழில் வினா எழுப்ப எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவரை அவையில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே வினா எழுப்பமுடியும் என்ற நிலை இருந்தது. இப்போது தமிழகம், புதுச்சேரியில் இருந்து 40 எம்பிகள் உள்ளனர். இதில் ஒருவராது தமிழில் வினா எழுப்புகின்றாரா? இதனால் பெற்றுத்தந்த உரிமைகளை பேணும் பண்பு வர வேண்டும்.

மது குடிப்பதை தடுத்தால் கோடி புண்ணியம் என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மகாத்மா காந்தி படத்தை போட்ட ரூபாய் நோட்டை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்கும் அவலமம் இங்கு உள்ளது.

குடிப்பதால் வீட்டில். சமுதாயத்தில் ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் மது குடிப்பதை தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மொழிப் பற்றையும், நாட்டுப்பற்றையும் போற்றிய நாமக்கல் கவிஞரை மாணவிகள் படித்து, அதன்படி வாழ உறுதியேற்க வேண்டும் என பேசினார்.

நாமக்கல் கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், நாமக்கல் கவிஞர் மகன் ராஜா வெங்கட்ராமன், பேரன் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!