Gaja Storm, Impacts will be Fully Provided With Electricity Within One Week: Minister Thangamani interviewed!

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட 14 அரசு பள்ளிகளை சேர்ந்த 2854 மாணவ,மாணவிகளுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது :

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் சீரமைக்கும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்100 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிராம பகுதிகளில் 75 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது இன்றைய தினம்80% வழங்கப்பட்டுவிடும்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் கிராம பகுதிகளில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத கிராமபுற பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி,முத்துப்பாண்டி ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அங்கு உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு மூன்று நாட்களில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கு ஒரு வார காலத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

விளை நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்ற கேள்விக்கு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சுமுக உடன்பாடு ஏற்பட்டது அந்த பணிகள் அமைக்கப்படும்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உருவாக்கி தந்துள்ளார். தற்போது புதிய மின் திட்டங்கள் நடைபெற்று வருவதால் வரும் 4ஆண்டுகளில் 4,000 மெகா வாட் உயரும். புதிய மின் பாதை திட்டங்களால் கொண்டுவரப்படும் பாதை வந்தால்தான் தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க முடியும்.

அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து உங்களுடைய ரகசிய ஆடியோ ஒன்றை டி.டி.வி. தினகரன் தரப்பினர் வெளியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்விக்கு அவர்கள் தாராளமாக வெளியிடட்டும். எனக்கு மடியில் கனம் இல்லை. அவர்கள் வெளியிட்ட ஜெயக்குமார் குறித்த ஆடியோ விவகாரத்திலும் ஒன்றுமில்லை. ஆடியோ வெளியிடு என்ற பெயரில் தினகரன் ஒவ்வொருவரையும் பிளாக் மெயில் செயது வருகிறார் என தெரிவித்தார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!