Full Statue of Bronze for Karunanidhi: Resolution at the meeting of General members of Namakkal City DMK

நாமக்கல்லில் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நாமக்கல் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் வரவேற்றார்.

இதில் கட்சியின் சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி, கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பார்த்தீபன் ஆகியோர் பங்கேற்று நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நாமக்கல் நகர பொறுப்பாளராக ரணா ஆனந்த் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்த திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் நகர திமுக சார்பில் உரிய அனுமதி பெற்று கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்படும். நாமக்கல் நகர திமுகவிற்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிதாக நூறு கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றப்படும்.

மாற்று கட்சியை சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை திமுகவில் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் திமுகவிற்கு அதிகப்படியான வாக்குகள் பெற்றுத்தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலமகளிர் அணிதுணை அமைப்பாளர் ராணி, மாநிலசட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர் நக்கீரன்,பொதுக் குழு உறுப்பினர் மாயவன், மாவட்ட துணைச் செயலாளர் விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், ஒன்றியச் செயலாளர் ராசிபுரம் ஜெகநாதன், துணை அமைப்பாளர்கள் கணபதி, சத்தியபாபு, நவீன், நகர கழக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பால்ரவிச்சந்திரன், ரமேஷ், அன்பரசு, ஆனந்த், ஆனந்தன், வார்டு செயலாளர்கள் மதனகோபால், பாஸ்கர், மனோபாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!