Free training on dairy farming in Namakkal

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 21ம் தேதி திங்கள் கிழமை காலை 9மணிக்கு கறவை மாடு வளர்ப்பு மற்றும் தீவனம் அளித்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் கறவைமாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள், கனநீர் மாறுபாடுகள், நோய்க்கிருமிகளின் தாக்குதல் மற்றும் தீவன குறைபாடுகளால் ஏற்படும் தற்காலிக மலட்டுத்தன்மை குறித்தும் நிரந்தர மலட்டுத்தன்மை குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். சினைப்பருவ அறிகுறிகள் மற்றும் சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை சினைப்பருவத்திற்கு வரவைப்பது பற்றிய வழிமுறைகள் பற்றியும், தீவன வகைகள், தீவன மேலாண்மை, பசுந்தீவன மேலாண்மை, உலர்தீவன மேலாண்மை, அடர்தீவன மேலாண்மை, மரபு சாரா பொருட்களை பயன்படுத்தி தீவன மேலாண்மை குறித்த பயிற்சி விரிவாக அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நோரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 21ம் தேதி திங்கள் கிழமை காலை 9 மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!