Free training camp for crab farming in Namakkal: Announcement of Agricultural Science Center

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு :

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 21ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு களி நண்டு வளர்ப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில் நண்டு வளர்ப்புக்கான இடம், தண்ணீர் மற்றும் தாய் நண்டு தேர்வு செய்தல், நண்டு குஞ்சு உற்பத்தி, வளர்ப்பு குளங்கள் அமைப்பு, உணவு முறைகள், கூண்டு முறையில் வளர்ப்பு, நோய் தடுப்பு முறைகள், விற்பனை உத்திகள் மற்றும் ஏற்றுமதி பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 21ம் தேதி காலை 9மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!