Free multimedia training for youth: Perambalur district collector information to register

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும் மல்டிமீடியா மற்றும் டிஜிட்டல் நான் லீனியர் படத் தொகுப்பு (AVID & FCP) ஆகிய பயிற்சிகள் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வாலிகண்டபுரம் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

பயிற்சி மையத்தில் 10.11.2018 அன்று பயிற்சியில் சேர்வதற்கான பதிவும், 12.11.2018 முதல் 90 மணி நேர பயிற்சியும் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள வருபவா;கள் தங்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டையின் நகல், ஆதாh; அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் ஒளிப்பட நகல்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

நாள் ஒன்றுக்கு ரூ.100. தினப்படி கணக்கிடப்பட்டு பயிற்சியின் முடிவில் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இப்பயிற்சியின் மூலம் சினிமா, தொலைக்காட்சி, செய்திதாள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் போட்டோ ஸ்டுடியோகளில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் சுய தொழில் செய்தும் பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 9840420743, 9677144786 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!