Free educational equipment for students in Namakkal: Coimbatore industrialist Rajendran presented.

நாமக்கலில், மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள்: கோவை தொழில் அதிபர் ராஜேந்திரன் வழங்கினார்.

நாமக்கல் பேட்டையில் உள்ள நகராட்சி உருது துவக்கப்பள்ளி மற்றும் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய மஸ்ஜித் முத்தவல்லி ஷேக் நவீத் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் ரபீக், பொருளாளர் முபாரக் பாஷா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் சாதிக்பாஷா, அன்பழகன் மற்றும் வீராங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை ஜேஆர்டி ரியல் டார்ஸ் சேர்மன் டாக்டர் ராஜேந்திரன், இணை நிர்வாக இயக்குனர் தீபக் விக்னேஷ்வர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச ஸ்கூல் பேக், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரனங்களை வழங்கினார்கள்.

சுமார் 250க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உபகரனங்கள் வழங்கப்பட்டன. அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஷாஜகான், நாசன்பாஷா, அப்துல்லா, தவுலத்கான், பன்னீர்செல்வம், மணி, பொன்னுசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!