Former Chief Minister J Jayalalithaa’s Memorial Day: AIADMK activists in Perambalur are silent march; Tributes

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலமாக சென்று, ஆயிரக்ககணக்கான தொண்டர்கள் மலரஞ்சலி செலுத்தினர்

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள், பேரூர், நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 2வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் வானொலித் திடலில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.

பின்னர், அங்கு அலங்கரிக்கப்ட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். அங்கு கூடியிருந்த அதிமுகவினர் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் கொள்கைப்படியும், மக்காளால் நான், மக்களுக்காகவே நான், என்ற வாக்கிற்கிணங்க அதிமுகவை வழிநடத்தி செல்ல சூளுரை எடுத்து கொண்டனர்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், எம்.பிக்கள் ஆர்.மருதைராஜா (பெரம்பலூர்), எம்.சந்திரகாசி (சிதம்பரம்), மாவட்ட அவைத் தலைவர் நெய்க்குப்பை துரை, ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன் (ஆலத்தூர்), என்.சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), மகளிர் அணியினர், தொழிலாளர் அணியினர், கூட்டுறவு சங்க தலைவர்கள், சிறுபான்மை பிரிவு, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, கலை இலக்கிய பிரிவு, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அம்மாபாளையம் வடிவேல், எசனை – கீழக்கரை பன்னீர் செல்வம், குரும்பாபாளையம் நகராஜன், உள்ளிட்ட பேரூர், நகர பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட கட்சியின் பல முக்கிய பிரதிநிதிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பெரும் திரளாக 5 ஆயிரத்திற்கும் மேற்படட தொண்டர்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக வானொலித் திடல் மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு, பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், வழிபோக்கர்கள் அஞ்சலி செலுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!