Extend time to Anatomical exam demanding a Puthiya Tamilagam party petition to The Perambalur Collector

பெரம்பலூர். மார்ச்.28-

பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜே.பாலாஜி தேவேந்திரன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமையில் மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை, உடற்கூறு ஆய்வு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செய்யப்படுகிறது. இதனை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்க வேண்டும், உடற்கூறு ஆய்வுக்கென்று எம்.டி.எ.ஃப்.எம் படித்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. அவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நபர்களுக்கு உடற்கூறு ஆய்வு இறந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, தேனி, விருதுநகர், உள்ளிட்ட தென் மாவட்ட அதிக அளவில் சிரமப்படுகின்றனர். ஒரு நாட்களில் விபத்தில் இறந்தவரின் உடலை , உடற்கூறு ஆய்வுக்கு பிறகு பெறுவதற்கு இரு நாட்கள் ஆகிவிடுகின்றன. உதாரணத்திற்காக, சமீபத்தில் தமிழர் நடுவம் அமைப்பின் நிறுவன தலைவர் செல்வா பாண்டியன் மற்றும் அவரது கார் ஓட்டுனர் விபத்தில் முதல் நாள் மாலை 3 மணிக்கு மரணமடைந்தனர். அவரது உடல் அடுத்த நாள் பிற்பகலிலேயே உடற்கூறு ஆய்வு செய்து கொடுக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் மற்றொருவர் தென்காசியை சேர்ந்தவர். ஆனால், அவரது உறவினர்கள் மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையங்களில் தூங்காமல் அமர்ந்திருந்தனர். ஆகவே, விபத்து நடந்த உடன் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு சிரமம் அளிக்காமல் அரசு உத்தரவுப்படி சூரிய உதயத்திற்கு பின்னும், சூரிய அஸ்தமனத்திற்கும் முன்பு செய்யா விட்டாலும், பரவாயில்லை ஓரிரு மணி நேரங்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!