Everyone should do their best to help those who can not help: Perambalur Collector

அனைவரும் தங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்ய முன் வரவேண்டும் என ஆட்சியர் சாந்தா வேண்டுகோள் விடுத்தார்.

பெரம்பலூரில் ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ் அப் சமூக வலைதள சேவைக்குழுவின் 2 ஆண்டு துவக்கவிழா மற்றும் 6ம் சேவை வழங்கும் விழா துறைமங்கலம் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளியில் இன்று நடந்தது.

விழாவிற்கு லயன்ஸ் கிளப் சாசன தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ணா கல்விநிறுவன செயலாளர் விவேகானந்தன், அன்னை பருவதம்மா மெட்ரிக்பள்ளி தாளாளர் கணேசன், அன்னை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

அரியலூர் எக்விடோஸ் பேங்க் சீனியர் மேலாளர் முத்துராஜா, துறைமங்கலம் சாதனா பெண்கள் அழகு நிலைய இயக்குநர் ராணி, கல்லூரி மாணவி கிரிஜா, சங்க செய்திதொடர்பாளர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர்.

கலெக்டர் சாந்தா நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், வாட்ஸ்அப் என்ற சமூக வலை தளங்களை பலர் பல வகையில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பெரம்பலூரில் சேவைகளை செய்வதற்காக ஹேப்பி டீம் 2.0 என்ற வாட்ஸ்அப் சமூக வலைதளம் ஏற்படுத்தி அதன் சேவைக்குழுவினர் தாங்கள் இயன்ற நிதி மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இதே போல் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்ய முன் வரவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் களரம்பட்டியை சேர்ந்த பி.இ படிக்கும் ஏழை மாணவர் நிரஞ்சன் என்பவருக்கு கல்வி உதவி தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் 50 மாணவர்களுக்கு டிராவல்ஸ் பேக் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அன்பகம் காப்பாகத்திற்கு சுவர் கடிகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஆசிரியர் ராசபாண்டியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரிமா சங்க பொறுப்பாளர் பொன்கேசவராஜசேகரன், மாரிமுத்து, வாட்ஸ் அப் குழு அமைப்பு பொருளாளர் கீதா, பொறுப்பாளர்கள் பாலு, சுந்தர்ராஜ், சத்யா, மழைராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வாட்ஸ்அப் குழு அமைப்பு பொருளாளர் சீனிவாசன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!