EPS OPS can not even talk about 20 people talking about corruption: A.Raja

அ.தி.மு.க. அரசில் ஊழல்களை கண்டித்தும், முதல்வர் உட்பட அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தியும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. .

மத்திய வருமான வரித்துறை ஆய்வின் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி தொடர்பான மிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள்,

துணை முதல்வர் ஓ.பி.எஸ். உறவினர்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடுகள், குட்கா ஊழலில் தமிழக காவல் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோருடைய தொடர்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியின் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், சத்துணவு முட்டை ஊழல் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணி வகுத்து வெளியில் வந்து கொண்டிருப்பதையும்,

அனைத்து துறைகளிலும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது கூட்டுறவு தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடைபெறாமல் ஆளுங்கட்சியினரே பல்வேறு இயக்குனர்களாகவும். தலைவர்களாகவும் அறிவிக்கப்படுகிறார்கள்.

தமிழக மக்கள் விரோத அதி.மு.க. ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் – ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராஜா பேசியதாவது:

அதிமுகவை சேர்ந்த ஈ.பி.எஸ், ஓபிஎஸ் இருவரின் ஊழல் குறித்து பேசினால் 20 பேர் பேச வேண்டும், திரும்பும் திசையெல்லாம் அதிமுகவினர் ஊழலில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், தமிழக மக்கள் தற்கொலைக்கு தூண்டும் வகையில் உலக வங்கியில் 800 கோடி ரூபாய் பெற்று ஆறு, குளம், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரப்போவதாக கடன் பெற்று ஏமாற்றி வருகின்றனர்.

தொடர்ந்து இந்த ஆட்சியில் தமிழக மக்களின் வாழ்வுரிமை மிக மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பேசினார்.

முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், அவைத் தலைவர் நடராஜன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், வழக்கிறஞர் ராஜேந்திரன், வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், நகர செயலாளர் பிரபாகரன், டி.சி.பி பாஸ்கர், ஒன்றிய செயலாளார்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மதியழகன் (வேப்பூர்), நல்லத்தம்பி (வேப்பந்தட்டை), அண்ணாதுரை (பெரம்பலூர்), மற்றும் வர்த்தகர் அணி பொறுப்பாளர் கே.சி.ஆர் குமார்,

உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!