Employment in Perambalur District Court: 62 vacant posts

பெரம்பலூர் மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.பாலராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணியில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், நகல் பரிசோதகர், நகல் படிப்பாளர், முதுநிலைக் கட்டளைப் பணியாளர், ஓட்டுநர், இளநிலைக் கட்டளைப் பணியளர், ஒளிநகல் பெருக்குநர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், மசால்ஜி,தோட்டி, துப்புரவு பணியாளர், சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பொருட்டு நேர்முகத் தேர்வு பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.  
அதன்படி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவினரும் (ஆண், பெண்) 18 வயது முதல் 32 - 35 வயதிற்குள் இருக்க வெண்டும்.   கல்வித்தகுதி உட்பட அனைத்து விவரங்களும் https://districts.ecourts.gov.in/perambalur  என்ற இந்நீதிமன்ற இணையதள முகவரியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது பணி செய்யும் விபரங்களுடனும், அனைத்து கல்விச்சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை, முன்னாள் படைவீரர் மற்றும் கலப்புத் திருமணம்) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டியும் (உரிய சுயசான்றொப்பத்துடன்) மற்றும் பிற சான்றிதழ்களிலும் சுயசான்றொப்பம் இட்டு முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு வரும் 21.01.2019 தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு தபாலில் அனுப்ப வேண்டும்.  காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.  நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு.  

மேலும், விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூத்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வெண்டும். ஒன்றுக்கு மெற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு, நேர்காணலுக்கு அழைப்பு https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதள வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். வேறு எந்த வகையான முறையிலும் விண்ணப்பதாரருக்கு தனிப்பட்ட முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே, விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து மேற்கூறிய இணையதள வலைதளத்தை தொடர்ந்து கவனித்து தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது அசல் சான்றிதழ்களை இணைக்காமல், சான்றுகளின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைக்க வெண்டும். எனவே, மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!