Employment Camp in Perambalur: 156 persons are appointed

பெரம்பலூர் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, சென்னை, கோவை மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இம்முகாமில் கலந்துகொண்ட 850 வேலைநாடுநர்களில் 156 நபர்கள் பணி நியமனம் பெற்றனர். பணிநியமனம் பெற்றவர்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தியாகராஜன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல், பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!