Eligible to apply for the free sewing machines

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறையின் மூலம் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்றவர், கணவனால் கைவிடப்பட்டவர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்ளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் இலவச தையல் இயந்திரங்கள் பெற விரும்புவோர் ஆதரவற்றவர், கணவனால் கைவிடப்பட்டவர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று, குடும்ப வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ.72, ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்), வயது சான்றிதழ் (20 முதல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும், வயது சான்றுக்கு பள்ளி கல்விச் சான்று அளிக்கவேண்டும்), ஜாதி சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெறப்படவேண்டும்), தையல் பயிற்சிப் பெற்றதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் – 2 உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 07.04.2017-க்குள் தங்கள் விண்ணப்பங்களை அளிக்கவேண்டும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை 8056555813 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை மேலும், அறிந்துகொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!