Education, medication for zero interest loan: janseva Cooperative bank Association Secretary Sardar Information

மத்திய அரசின் வேளாண் மற்றும் கக்ஷட்டுறவு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் இந்தியாவில் 12 மாநிலங்களில் 33 கிளைகளுடன் ஜன்சேவா கக்ஷட்டுறவு சங்கம் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் ஜன்சேவா கக்ஷட்டுறவு சங்க செயலாளர் சர்தார் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
ஜன்சேவா கக்ஷட்டுறவு சங்கம் மும்பையை தலைமை இடமாக கொண்டு கடந்த 2010 முதல் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் வேளாண் மற்றும் கக்ஷட்டுறவு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் இந்தியாவின் 12 மாநிலங்களில் 33 கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 22 ஆயிரம் உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. சங்கத்தின் நோக்கம் உறுப்பினர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு வட்டியில்லா கடன் உதவி வழங்குவது. தொழில் சார்ந்த கடன் லாபத்தின் அடிப்படையில் அதவாது குறைவான ஒரு லாபத்தை வைத்து தொழில் தொடங்க உதவுவதுதான் நோக்கம். அபராதமோ, வட்டியோ பெறுவது கிடையாது. தெற்கு ஆசியாவில் சிறந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் என்ற விருதை ஜன்சேவா கக்ஷட்டுறவு சங்கம் பெற்றுள்ளது. இதுதவிர சென்னை யுனைடெட் எகனாமிக் போரம் சார்பாக ஒரு விருதும், இலங்கை தலைநகர் கொழும்புவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் பைனான்ஸ் போரம் ஆப் சவுத் ஆசியா சார்பாக ஒரு கோல்ட் மெடலும் பெற்றுள்ளோம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன்சேவா சங்கம் 2017 மார்ச் முதல் செயல்பட்டு வருகிறது. எங்கள் ஜன்சேவா சங்கம் இதுவரை ருபாய் 225 கோடி டர்ன்ஒவர் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் உறுப்பினராக சேர்ந்து வட்டியில்லா பொருளாதாரத்தின் பயனை பெற ஜன்சேவா கக்ஷட்டுறவு சங்கம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!