Draft Voting List for Local Elections Issue: Collector Information

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் சாதாரண உள்ளாட்சித் தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் கீழ்கண்டவாறு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சியில் 50 வாக்குச்சாவடிகளும், 4 பேரூராட்சிகளில் 60 வாக்குச்சாவடிகளும், 4 ஊராட்சி ஒன்றியங்களில் 638 வாக்குச்சாவடிகளும் ஆகக் கூடுதல் 748 வாக்குச்சாவடிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக இம்மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் ஆட்சேபணை ஏதுமிருந்தால் எழுத்துபூர்வமாக 02.05.2019 தேதிக்குள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பாக பெறப்படும் ஆட்சேபனைகள் கருத்துக்களை பரிசீலித்து தேவைப்படின், உரிய திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் வருகிற 04.05.2019ம் தேதியன்று தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வெளியிடப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!