Dowry case! Darna at Perambalur Collector’s office condemning the police for not taking action

மங்கலமேடு காவல்துறையினரை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் உறவினர்களுடன் இன்று நடந்த பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் அபுதாஹீர் மனைவி லலிதா. இவரிடம் வரதட்சிணை கேட்டு தன்னை துன்புறுத்தும் மாமனார், நாத்தனார், நாத்தனாரின் கணவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மங்கலமேடு காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பலமுறை புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், கொடுக்கப்பட்ட புகார் மனுக்களுக்கு, எவ்வித நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, லைலா அவரது கணவர் அபுதாஹிர், உறவினர்களான, ஜாபர் சாதிக், முகமது இக்பால் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடந்த பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த தனித்துணை ஆட்சியர் சக்திவேல், தர்னாவில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் தர்னா போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!