DMK has been wearing black shirt against Central government in Ramanathapuram

ராமநாதபுரத்தில் தி.மு.க. சார்பில் பணமதிப்பு இழப்பு ஏற்படுத்தி இந்திய பொருளாதார வீழ்ச்சி அடையசெய்த பா.ஜ.வின் மத்திய அரசை கண்டித்து கருப்புசட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தி.மு.க.வி்ன் கருப்புசட்டை அணிந்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமுர்த்தி, முன்னாள் எம்.பி.பவானிராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் இன்பா ரகு, இளைஞரணி சம்பத், நகர் செயலாளர் கார்மேகம், ஒன்றிய செயலாளர் கணகு, சொத்துபாதுகாகப்புகுழு உறுப்பினர் அகம்மதுதம்பி, ஓய்வு பெற்ற டிஆர்ஓ குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் பார்த்தசாரதி, ராமேஸ்வரம் முன்னாள் நகர் செயலாளர் ஜான்பாய், முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசைமுகம்மது, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜிசேதுபதி, நகர் தலைவர் மாரியப்பன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் பேசியபோது மத்திய அரசின் நடவடிக்கையால் பொருளாதாரம் படும்பாதாளாத்திற்கு சென்றுவிட்டது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. கடந்த 2016ல் நவ.9ல் கருப்பு பணத்தை அழிக்கிறோம் என ருபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு. ஆனால் கருப்பு பணத்தை மத்திய அரசால் இதுவரை அழிக்கமுடியவில்லை. எனவே இந்த தினத்தை மக்களின் விரோத செயலாக கருதி கருப்பு தினமாக அனுஷ்டிக்கிறோம். தமிழகத்திலும் அரசு செயல்பாடின்றி உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

சாலைகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் குண்டும் குழியுமான சாலைகளாக உள்ளதால் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில்தான் காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு தடையின்றி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் இந்த அரசு சரியாக பராமரிக்காததால் குடிநீர் சில பகுதிகளில் சரியாக கிடைப்பதில்லை. இதற்கு தி.மு.க. அரசு வந்தால்தான் மீண்டும் மக்களுக்கு நல்லதொரு காலம் பிறக்கும், இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கவேலன் பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்ற ராமேஸ்வரம் முன்னாள் நகர் செயலாளர் அணியினர் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடந்த தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ராமேஸ்வரம் முன்னாள் நகர் செயலாளர் ஜான்பாய் தலைமையில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கர், இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், வார்டு செயலாளர்கள் அர்ச்சுணன், கபாலி, அப்பாஸ் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் 25 வாகனங்களில் வரவழைத்து வந்து பங்கேற்றனர். ராமேஸ்வரம் தி.மு.க. அணியினர் பெருந்திரளாக பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

முன்னாள் நகர்செயலாளர் ஜான்பாய் தெரிவித்தாதவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல்தலைவர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் மாவட்ட செயலாளர் திவாகரன் அழைத்ததின் பேரில் ராமேஸ்வரத்தில் இருந்து தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளோம். மக்களி்ன் நலனுக்காக தி.மு.க. நடத்தும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கும் திரளாக பங்கேற்று மக்கள் நலன் காப்போம், என்றார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!