DMK Alliance Contest the Parliamentary constituency Announcements

தொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.

எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் பின்வருமாறு…

காங்கிரஸ்: கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், கிருஷ்ணகிரி,
கரூர், திருச்சி, தேனி, சேலம், திருவள்ளூர் புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் : விழுப்புரம், சிதம்பரம்

மார்க்சிஸ்ட் : மதுரை, கோவை

இந்திய கம்யூனிஸ்ட் ; நாகை, திருப்பூர்

மதிமுக : ஈரோடு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் : ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி : நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி : பெரம்பலூர்

திமுக:

தென்சென்னை, மத்தியசென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி , திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி,


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!