Disadvantages caused by alcohol awareness concert in Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பாக கலெக்டர் நடராஜன் மதுபானம் மற்றும் கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு படிப்படியாக புரண மதுவிலக்கு என்ற நிலையினை அடைந்திடும் விதமாகவும், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்றைய தினம் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பாக கலெக்டர் நடராஜன் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைநிகழ்சச்சியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் நடராஜன் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொது மக்களுக்கு வினியோகித்தும், ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டியும் விழி்ப்புணர்வு ஏற்படுத்தினார்.

இக்கலை குழுவினர் மது, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை உட்கொள்வதனால் தனிமனிதனுக்கு உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டுப்புறப்பாட், கரகாட்டம், தப்பாட்டம், ஓயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக பொது மக்களுக்கு எளிமையாக புரிந்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இக்கலை குழு மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களிலும் பல்வேறு கிராமங்களிலும் நேரடியாக ெசன்று கலைநிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.,டாக்டர் சுமன், உதவி ஆணையர் (கலால்) அமிர்தலிங்கம், தாசில்தார்கள் சண்முகசுந்தரம், தர்மர் உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!