devipattinam krishna international school students guinness record of sitting in pencil

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வி தேவை என்ற குறிக்கோளின் அடிப்படையில் 704 மாணவர்கள் பென்சில் வடிவில் அமர்ந்து உலக சாதனை புரிந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ரெயின் டிராப்ஸ் இணைந்து கின்னஸ் சாதனைக்காக பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் இணைந்து கல்வி தேவை என்பதை விளக்கும் வகையில் கல்வியின் முதல் படியான பென்சிலை குறிக்கும் வகையில் பென்சில் வடிவில் அமர்ந்தனர், 704 மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கருப்ப, சிவப்பு, வெள்ளை நிறங்களில் ஆடை அணிந்து பென்சில் போல் அமர்ந்தனர்.

உலக சாதனைக்காகவும் கின்னஸ் சாதனைக்காகவும் நடந்த இவ்விழாவில் பள்ளியின் தலைவர் மாதவனுார் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கணேசகண்ணன், செயலாளர் ஜீவலதா கணேசகண்ணன், இயக்குனர் முனியசாமி, நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற புகழ் ராஜா, திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹானா, மண்புழு உரத் தந்தை டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வக்கீல் வேல்முருகன், ஆடிட்டர் மலையப்பன், ரோட்டரி நிர்வாகி ரவிசந்திரராமவன்னி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவினை பள்ளியின் முதல்வர் முத்துக்குமார், கண்ணன், ரெயின்போ நிறுவனர் அரவிந்த் ஜெயபால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

முன்னதாக பள்ளியின் சார்பாக தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரு.75 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டும், ராமநாதபுரம் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, சென்னை ஆனந்தம் ஹோம், சென்னை சீர்ஸ் ஹோம் மாணவர்களுக்கு ரு.35 ஆயிரம் மதிப்பிலான 7 ஆயிரம் பென்சில்கள் இலவசமாக வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!