Demonstrate the demands of the Graduate Teacher’s Board in Namakkal

நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி செயலாளர் வாசுகி, மாட்ட சட்ட செயலாளர் குமார், மாவட்ட தலைமையிட செயலாளர் சண்முகம்ல மாவட்ட செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் ஜாய் சவரியம்மாள், நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் முருகேசன் வரவேற்றார்.

இதில் ஒரு பள்ளியில், ஒரு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போதிய பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றால், அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமே ஒழிய, அப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை அல்ல. இந்தப் பழிவாங்கும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும். உபரி என காரணம் காட்டி, பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதை கைவிட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பதவி உயர்வுகளையும் வழங்கிய பின்னர்தான், உபரி ஆசிரியர் கணக்கிடும் முறை தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முழுமையாக முடித்த பிறகுதான் உபரி ஆசிரியர் கணக்கிடும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் அருள் செல்வன்,கண்ணன், சுப்பிரமணியன், உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!